Global Tamil School
img-photo

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; அது நமது அடையாளம், பண்பாடு மற்றும் தலைமுறைகளை இணைக்கும் ஒரு உயிரோட்டம். அந்தத் தமிழை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு எளிதாகவும், தரமாகவும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவலுடன் உலகளாவிய தமிழ்ப் பள்ளி (Global Tamil School) தொடங்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பயணம், இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு, இன்று பல நாடுகளிலிருந்து மாணவர்களை இணைக்கும் ஒரு உலகளாவிய கல்வி மேடையாக வளர்ந்துள்ளது. காலம், நாடு, நேர மண்டலம் என எந்தத் தடையும் இன்றி, ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கேற்ற முறையில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது முதன்மை நோக்கம். அதே சமயம், மாணவர்களுக்குள் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் மீது பற்று, பெருமை மற்றும் ஆர்வம் வளர வேண்டும் என்பதையும் முக்கியமாகக் கருதுகிறோம்.
தகுதியான, அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம், மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் முறைகள் ஆகியவை எங்கள் பள்ளியின் வலிமை. உலகில் எங்கு இருந்தாலும், தமிழ் மொழியுடன் மாணவர்கள் இணைந்திருக்க உலகளாவிய தமிழ்ப் பள்ளி ஒரு நம்பகமான கல்வித் தளமாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
வாழிய தமிழ் மொழி !


திருமதி. உமா அசோக் M.Sc., M.Ed.,
நிறுவனர்.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்."

தமிழ்மொழியை உலகம் முழுவதும் அதிகமான மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பிக்கும் முன்னோடி நிறுவனமாக உலகளாவிய தமிழ்ப் பள்ளி திகழ்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பயனளிக்கும் வகையில் பாடத்திட்டங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து கற்பித்து வருகிறோம்.
உயர்தரமான பாடநூல்கள், பணித்தாள்கள் மற்றும் மதிப்பீட்டுத் தாள்களைப் பயன்படுத்தி, தமிழ் மொழிக் கற்றலை முறையாகவும் பயனுள்ளதாகவும் வழங்குகிறோம். ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஆத்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் எங்களிடம் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு வருகின்றனர்.
மேலும், தமிழ் மொழியுடன் இணைந்து தமிழ்க் கலைகளையும் வளர்க்கும் நோக்கில், இந்திய நிகழ்த்துக் கலைகளுக்கான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளின் மூலம், சர்வதேச தேர்வு மையங்களின் மூலம் இணையவழி தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

We take pride in being Global Tamil School, a pioneering institution that delivers Tamil language education online to a large number of students across the world. With a strong focus on the holistic development of learners, we carefully select and implement effective curricula that support meaningful and structured learning.
Using high-quality textbooks, worksheets, and assessment materials, we provide systematic and impactful Tamil language instruction. Hundreds of students from the United Kingdom, United States, Canada, European countries, Gulf nations, India, Singapore, Malaysia, and Australia are currently learning Tamil with us.
In addition to Tamil language education, we also offer classes in Indian performing arts with the aim of nurturing Tamil arts and culture. Through these programmes, online examinations are conducted via international examination boards, and successful candidates are awarded recognised certificates.

img-photo

பணி நோக்கம்

உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் பணி நோக்கம், உலகம் முழுவதும் வாழும் மாணவர்களுக்கு இணையவழி மூலம் தரமான, எளிதாக அணுகக்கூடிய தமிழ் மொழிக் கல்வியை வழங்குவதாகும். ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், தகுதியான ஆசிரியர்கள் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வி வாய்ப்புகள் மூலம், தமிழ் மொழித் திறனையும் தமிழ்ப் பண்பாட்டின் மீது ஆழமான மதிப்பையும் மாணவர்களிடையே வளர்ப்பதே எங்களது இலக்காகும்.

MISSION

Our mission at Global Tamil School is to provide accessible, high-quality Tamil language education to learners across the world through innovative online teaching. We are committed to nurturing strong language skills, cultural awareness, and a lifelong appreciation for Tamil heritage by offering structured curricula, qualified educators, and globally recognised learning pathways.




தொலைநோக்குப் பார்வை

உலகம் முழுவதும் தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக் கல்வியில் முன்னணியான மற்றும் நம்பகமான கல்வி நிறுவனமாக விளங்குவதோடு, எதிர்காலத் தலைமுறைகளுக்கு தமிழ் மொழியை உறுதியுடன் கொண்டு செல்லும் வகையில் மாணவர்களை உருவாக்குவதே உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் தொலைநோக்குப் பார்வையாகும்.

VISION

To be a globally recognised centre of excellence in Tamil language and cultural education, empowering learners worldwide to connect with Tamil heritage, achieve academic success, and carry the language forward to future generations.

Reviews & Ratings

Mentions